ஈரோடு அருகே பரிதாபம்.! தந்தை-மகள் தற்கொலை...! சிக்கிய உருக்கமான கடிதம்...! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தந்தையும், மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் தோப்பு பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கராசு (63). இவரது மனைவி தங்கமணி. இவர்களுக்கு பிரியங்கா(31), கார்த்திகா(27) என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பிரியங்காவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் தங்கராசுவுக்கும் இதய கோளரால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்த தங்கராசும், பிரியங்காவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தந்தை, மகளும் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், எங்கள் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்றும், வேறு எந்த காரணமும் இல்லை என்றும் எழுதியிருந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father and daughter commits suicide in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->