சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி - அதிர்ச்சியில் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் பெரியபொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கௌதம் ஆனந்த் - பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு மிதுஸ்ரீ என்ற நான்கு வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று கெளதம் வீட்டில் சிக்கன் சமைத்துள்ளனர்.

இதனை கௌதம் மற்றும் அவரது மகள் உள்ளிட்ட இருவரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிறுமி மயக்கம் அடைந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் படி அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மகள் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கௌதம் மூச்சுத்தி திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மகள் மற்றும் கணவர் இறந்த வேதனையில் இருந்த பவித்ரா சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவித்தாவது, "கௌதம் ஆனந்த் மற்றும் அவரது மகளின் உடற்கூராய்வு நடைபெற்ற பின்னரே மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்றனர். சிக்கன் சாப்பிட்டதாள் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father and daughter died after eat chicken in madurai thirumangalam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->