சொல் பேச்சை கேட்காமல் காதலித்த மகள்.. கொலை செய்ய முயன்ற தந்தை..!
Father Attempt Killed His daughter
காதலித்ததால் மகளை கொலை செய்ய முயன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணகுமாரி என்ற மகள் இருக்கிறார். கிருஷ்ணகுமாரி கேக்கரை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதுபற்றி அறிந்த ஐயப்பன் தனது மகளை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அதனை கேட்காமல் ஜெகனுடன் கிருஷ்ணகுமாரி பேசி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டு வாசலில் நின்று ஜெகனுடன் கிருஷ்ணகுமாரி பேசிக்கொண்டிருந்தார்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த ஐயப்பன் இருவரையும் திட்டியதோடு கிருஷ்ணகுமார் அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Father Attempt Killed His daughter