கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் சுயநினைவு இழந்த சிறுமி.?! 3 மாதங்களாக சிகிச்சை.? தந்தை குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் 15 வயது மகள் சுயநினைவு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தந்தை புகார் கொடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பருத்திப்பட்டு பகுதியில் கூலி தொழிலாளியாக இருப்பவர்தான் மகாராஜன். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில், இரண்டாவது மகள் நல்ல தாய் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

 அவர் நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மகள் பாதிக்கப்பட்டதாகவும், எனவே அவரை மீட்டு தாருங்கள் என்றும் அரசுக்கு மகாராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர், "கொரோனா தடுப்பூசி போட்டவுடன் நல்ல தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு காய்ச்சல் அடித்ததால் சாதாரணமாக எண்ணி விட்டு விட்டோம். ஆனால், நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகி கொண்டே இருக்கிறது. சுயநினைவு கூட இல்லாமல் மூன்று மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father Blames Corona Vaccine whose daughter affected by Fever


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->