பொதுமக்கள் கவனத்திற்கு... மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க நாளை கடைசி நாள்..!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் 2.3 கோடி மின் இணைப்பு நுகர்வோர்கள் இருந்து வருகின்றனர். இவர்களை தவிர 22 லட்சம் விவசாயம் மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.

மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்திருந்த நிலையில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அதன் பிறகும் 40 லட்சம் பயனாளர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்காததால் மேலும் 15 நாட்களுக்கு காலாவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (பிப்.15) முடிவடைகிறது. பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.

நாளையுடன் கால அவகாசம் முடிவடைவதால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத பயனாளர்களின் வீட்டிற்க்கே சென்று ஆதார் எண் விவரங்களை பெற்று இணைக்கும் பணியில் மின்சார துறை ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Feb15 last day to link Aadhar number with electricity connection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->