மகா சிவராத்திரி.. நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
February 18 local holiday to thiruvarur district for maha Shivaratri festival
மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகா சிவராத்திரி. மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபடுவர். அவ்வாறு இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் கடவுளின் ஆசிகளை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த நிலையில் நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை வரும் பிப்ரவரி 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
English Summary
February 18 local holiday to thiruvarur district for maha Shivaratri festival