பெண் ஊழியர் தற்கொலை முயற்சி! விசாரணையில் வெளிவந்த மேல் அதிகாரியின் அட்டூழியம்! - Seithipunal
Seithipunal


சென்னை, ராயபுரம் கல்லறை சாலை அருகே குடிநீர் வாரிய அலுவலகத்தில் 33 வயது இளம் பெண் அதிகாரியாக உள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு அவரது மகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். 

அதே அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை பெண் அதிகாரி பலமுறை கண்டித்தும் அதிகாரியின் தொல்லை எல்லை மீறியது. 

இதனால் மனவேதனை அடைந்த பெண் அதிகாரி கடந்த 24ஆம் தேதி வீட்டில் இருந்தபோது தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை நன்றாக உள்ளது. 

இது குறித்து அறிந்த பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரியின் மனைவி, தற்கொலைக்கு முயன்ற பெண் அதிகாரியை தொடர்புகொண்டு அவருக்கும் அவரது மகள் மற்றும் தாய் ஆகிய 3 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அதிகாரி உடனடியாக ராயபுரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குடிநீர் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒரு தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Female employee attempted suicide superior officer again case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->