ஆன்லைன் ரம்மியில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்! அமேசான் நிறுவனத்தின் ஷாக் தகவல்!
femaleusers pent more tines on onine games in india amazon survey reports
ஆன்லைன் விளையாட்டுகளில் ஆண்களை விட பெண்களை அதிகம் ஈடுபடுவதாக சமீபத்திய அமேசான் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு நாடு முழுவதும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி வருகின்றனர். இதன் காரணமாக ஏகப்பட்ட பணமிழப்பு மற்றும் கடனுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்டங்களால் ஏராளமான தற்கொலைகள் நடந்திருப்பது நாம் அறிவோம்.
இத்தனை உயிர்களை காவு வாங்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக மசோதா ஒன்றை தயாரித்து அதற்கு ஆளுநரின் ஒப்புதலும் இன்று கிடைத்திருக்கிறது. விரைவிலேயே ஆன்லைன் விளையாட்டுக்கலுக்கான தடை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆண்களை விட பெண்களை அதிகம் ஈடுபடுவதாக அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்தியாவில் புராணங்கள் தொடர்புடைய விளையாட்டுகளில் 82 சதவீதம் பேர் ஈடுபடுவதாகவும் 50 சதவீதம் பேர் ஆன்லைன் சூதாட்டத்தை பொழுதுக்போக்கிற்கு ஆடுவதாகவும் 13 சதவீதம் பேர் பணத்திற்காக விளையாடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.
English Summary
femaleusers pent more tines on onine games in india amazon survey reports