கேள்விக் கேட்ட ஆத்திரம்.! வாலிபரைக் காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர்.! - Seithipunal
Seithipunal


கேள்விக் கேட்ட ஆத்திரம்.! வாலிபரைக் காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர்.!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்கா குளம் கிராமத்தில் உள்ள கோயிலில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் தலைமை வகித்த இந்தக் கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சி தலைவர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது வேப்பங்குளத்தை சேர்ந்த அம்மையப்பன் என்பவர், "ஊராட்சியில் உள்ள கிராமங்களில் சுழற்சி முறையில் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று உள்ளாட்சித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கடந்த முறை நடந்த அதே இடத்தில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த போது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது அதே இடத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதனால், பிற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர்" என்றுத் தெரிவித்துள்ளார்.

அதற்கு, ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், கடந்த கூட்டத்துக்கு நீ ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அம்மையப்பன், "ஆகஸ்ட் 17-ம் தேதி ஊராட்சி தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவுக்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் நிர்வாகம் தகுதி ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன?" என்று கேள்வி கேட்டுள்ளார். 

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஊராட்சி செயலர் தங்க பாண்டியன், தரையில் அமர்ந்திருந்த அம்மையப்பனை காலால் எட்டி உதைத்துள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்கள் அம்மையப்பனை கடுமையாக தாக்கியுள்ளனர். எம்எல்ஏ, பிடிஓ, ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கேள்வி கேட்டவரை ஊராட்சி செயலர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஊராட்சி செயலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதில் காயமடைந்த அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அம்மையப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fight in srivillipuththur grama saba koottam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->