"சென்னையில் திரைப்பட இயக்குனர், மர்ம நபர்களால் வெட்டிக்கொலை!
Film director hacked to death in Chennai
திரைப்பட இயக்குநரும், ரவுடியுமான செல்வராஜ் என்கிற அப்துல் ரஹ்மான் கடந்த ஜூன் 5 ஆம் தேதி சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெரம்பலூரில் தனியார் மதுபான பாரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் உட்பட 6 பேரை பெரம்பலூர் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதைப்பற்றி போலீஸ் தரப்பில் தெரிவித்திருப்பதாவது; கொலை செய்யப்பட்ட செல்வராஜூக்கும் பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த அழகிரி என்பவருக்கும் ,கட்டப் பஞ்சாயத்து தொடர்பான தொழில் போட்டி இருந்து உள்ளது.
இந்நிலையில் மனைவி சங்கீதா மூலம், திருச்சி மத்திய சிறையில் உள்ள அழகிரி, சிறையில் இருந்தபடியே திட்டம் போட்டு செல்வராஜை கொலை செய்திருப்பது தெரியவந்தது. பெரம்பலூர் எளம்பலூர் சாலை மேட்டுத் தெருவைச் சேர்ந்த அபினாஷ் (22), செஞ்சேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நவீன்(19), திருச்சி மாவட்டம் துறையூர் வடமலைச் சந்து பகுதியைச் சேர்ந்த நவீன் (20), திருச்சி மாவட்டம் பூலாங்குடி காலனியை சேர்ந்த பிரேம் ஆனந்த் (45), இவரது மனைவி ரமணி (34) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவர் என இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேர் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவர்களில் சிறுவன் ஒருவர் திருச்சியிலுள்ள சிறார் கூர் நோக்கு இல்லத்திலும், மற்றவர்கள் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்களில் ரமணி, அழகிரியின் சகோதரி என போலீஸார் தெரிவித்தனர். தலைமறைவாக இருக்கும் அழகிரியின் மனைவி சங்கீதாவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் பெரம்பலூர் திருவள்ளுவர் பகுதியில் வசித்து வரும் ராஜன் மகன் சரவணன்(22) நேற்று முன்தினமும், பெரம்பலூர் மாவட்டம் வரகு பாடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தன்ராஜ் (28) திருச்சி நீதிமன்றத்தில் நேரடியாக சென்று நேற்று சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Film director hacked to death in Chennai