பட்டாசு ஆலையில் தீவிபத்து.. தொழிலாளி பரிதாப பலி.. விருநகர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், மானேரி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அந்த பகுதியை சேர்ந்த  25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வந்தனர்.

அப்போது, எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் அந்த ஆலையில் பணிபுரிந்து வந்த அரவிந்த் என்பவர் சம்பவம் இடிபாடுகளில் சிக்கி  பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். இளைஞரின் உடலை  மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்ககாக அனுப்பி வைத்த்னனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire accident at Pattasu Factory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->