திடீர் பரபரப்பு.. குடியரசுத் தலைவர் தங்கியிருக்கும் ஆளுநர் மாளிகை எதிரே தீ விபத்து.!! - Seithipunal
Seithipunal


இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ள நிலையில் அவர் ஆளுநர் மாளிகையில் உள்ள குடியரசு தலைவர்களுக்கான இல்லத்தில் தற்பொழுது தங்கி உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகைக்கு எதிரே உள்ள இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக ஆளுநர் மாளிகையில் உள்ள தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுநர் மாளிகைக்கு எதிரே உள்ள இடத்தில் குப்பைகள் அதிகமாக இருந்ததால் தீப்பற்றி எரிந்ததில் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

கிண்டி ராஜ்பவன் உள்ளே செல்லும் வாயிலில் எதிரே உள்ள ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தலைவர் ஆளுநர் மாளிகையில் இருக்கும் சமயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire accident in Governor House front place where President was staying


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->