ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு - பற்றி எரிந்த ஸ்டேட் பேங்க்.! கதறும் வாடிக்கையாளர்கள்.!
fire accident in jeyankondam state bank
ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு - பற்றி எரிந்த ஸ்டேட் பேங்க்.! கதறும் வாடிக்கையாளர்கள்.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கணக்கு தொடர்ந்து முதலீடு செய்தும், தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றும் செல்கின்றனர்.
இதனால் இந்த வங்கியில் கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியில் நேற்று இரவு மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், தொடர்ந்து நள்ளிரவு வரை தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் நகை மற்றும் பணம் என்ன ஆனதோ என்ற பயத்தில் சம்பவ இடத்திற்கு வரத்தொடங்கினர். இதனால், அப்பகுதியில், கூட்டம் அதிகமானது.
இதையடுத்து போலீசார் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீ விபத்து ஏற்பட்ட வங்கியில் பல கோடி மதிப்பிலான பணமும், பல கோடி மதிப்பிலான தங்க நகைகளும் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
அவை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளனவா?, அவற்றின் நிலை என்ன? என்பது தீயை அணைத்த பிறகே தெரியவரும் என்று வங்கி அதிகாரிகளும், போலீசாரும் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fire accident in jeyankondam state bank