நெய்வேலி என்.எல்.சி 2வது நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து.!! காரணம் என்ன.? வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது நிலக்கரி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வேலை தெரியாத புதிய ஆட்களை பணியமர்த்தியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

என்எல்சி நிறுவனத்தின் கீழ் உள்ள இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரியை இருந்து வெட்டி எடுக்க ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு வெட்டி எடுக்கப்படும் நிலக்கரிகள் பல கிலோமீட்டர் கன்வேயர் பெல்ட் மூலம் அனல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

அதே போன்று நிலக்கரிகளை சேமித்து வைக்க பல இடங்களில் சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரம் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து சம்பவமாக குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரம் எப்படி பற்றி எரிந்தது என என்எல்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்தப் பணியை பற்றி தெரியாத ஆட்களை நிலக்கரி வெட்டி எடுக்கும் ராட்சத இயந்திரங்களில் பணியாமர்த்தியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்ற முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் என்எல்சி அதிகாரிகள் தீ விபத்து தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு மேல் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வேலை தெரியாத ஆட்கள் பணியாமத்தப்பட்டதால் நெய்வேலி சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire accident in Neyveli NLC 2nd coal mine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->