திருப்பூர் || பனியன் கம்பெனியில் திடீர் தீ விபத்து - தொழிலாளர்களின் நிலை என்ன?
fire accident in tirupur baniyan company
திருப்பூரில் பனியன் கம்பெனியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் பகுதியை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் இயங்கி வந்த ஒரு தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 2 மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். திருப்பூரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை ஏற்பட்டதனால் சில இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, இன்று அதிகாலை மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.
அப்போது, ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தனியார் பனியன் கம்பெனியில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பனியன் தயாரிப்பு, பேப்ரிகேஷன் மற்றும் பேக்கிங் உள்ளிட்ட பணிகள் அங்கு நடைபெற்று வந்துள்ளது. இருப்பினும் போலீசார் இந்த தீ விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
fire accident in tirupur baniyan company