திருப்பூர் பனியன் கம்பெனியில் தீ...!!! பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!!!
Fire at thirupur Banyan Company Goods worth lakhs destroyed
திருப்பூர் பெருமாநல்லூரை அடுத்த அய்யம்பாளையத்தில், சுரேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான 35,000 சதுர அடியில் பனியன் நிறுவனம் உள்ளது.

இதில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், இன்று அதிகாலை பனியன் நிறுவனத்திலிருந்து புகை வருவதை பார்த்து பனியன் நிறுவன காவலாளி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பின்னலாடை எந்திரங்கள் மற்றும் துணிகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா?
அல்லது வேறு ஏதாவது காரணமா? என பெருமாநல்லூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Fire at thirupur Banyan Company Goods worth lakhs destroyed