நாகை | பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து! உடல் சிதறி உயிரிழந்த உரிமையாளர்!
Fireworks factory explosion owner died
நாகப்பட்டினம், வேதாரண்யம் அருகே உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் தலை துண்டித்து உயிரிழந்தார்.
ஆயக்காரன்புலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 4 பகுதிகளாக கட்டப்பட்ட கட்டிடங்களில் வாணம் உள்ளிட்ட வெடிகள் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை தொழிற்சாலையில் வெடி மருந்துகள் வைக்கும் கட்டிடத்தில் விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியதில் கடையின் உரிமையாளர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 70) என்பவர் தலை துண்டித்து சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சிவகாசியை சேர்ந்த கண்ணன் (வயது 37), சித்ரா (வயது 35) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Fireworks factory explosion owner died