திருப்பூரில் பரபரப்பு - வீடு புகுந்து தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு.!
five peoples arrested for tried murder in tiruppur
திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். குளிர்பானக்கடை நடத்தி வரும் இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உல்லேச் சென்று, அங்கிருந்த அரவிந்தனை அரிவாளால் சரமாரி வெட்டினர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை முருகேசன் தடுக்க முயற்சி செய்தபோது அவரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.
இந்தச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்ததும் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் ரத்த காயங்களுடன் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரையும் அரிவாளால் வெட்டியது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி , ஆகாஷ் , ஸ்டீபன் ராஜ், ஆதி, லலித்குமார் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அரவிந்தன் இடுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கஞ்சா வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அரவிந்தனை கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது.
English Summary
five peoples arrested for tried murder in tiruppur