தமிழக முழுவதும் அரைக் கம்பத்தில் செங்கொடி - இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு.!
flag hoisting half pole in tamilnadu for nagai mp selvaraj death
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் நாகை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ் உடல் நாளாக குறைவால் இன்று காலமானார். இது தொடர்பாக இந்திய கமியூனிஸ்ட் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- செல்வராஜ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
மறைந்த நாகை எம்பி செல்வராஜ் கட்சியில் பல பெரிய பொறுப்பு, பதவிகளில் இருந்தபோதும், கடைசி வரை மக்கள் தொண்டராக இருந்தவர். 7 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 1989, 1996, 1998, 2019 உள்ளிட்ட நான்கு ஆண்டுகள் எம்பியாக தேர்வானவர்.
அவரின் இறுதிச் சடங்கு திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் தமிழக முழுவதும் செங்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
English Summary
flag hoisting half pole in tamilnadu for nagai mp selvaraj death