தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்.! - Seithipunal
Seithipunal


உலக அதிசயங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்தக் கோவிலில் உள்ள ஒற்றைக் கல்லால் ஆன நந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இத்தகைய பல்வேறு சிறப்புகளுடைய பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இந்த விழாவை முன்னிட்டு சந்திரசேகரர், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா நாட்களில் காலை, மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் புறப்பாடு நடைபெறவுள்ளது. இந்த சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flag hoisting in thanjavur big temple for sithirai thiruvizha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->