பயணிகள் பாதிப்பு : கனமழையால் வானில் வட்டமடித்த விமானங்கள்! சென்னையில் விமான சேவை பாதிப்பு! - Seithipunal
Seithipunal


மீனம்பாக்கம் : சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று இரவும் திடீரென இடி,மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு. 

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் விமான நிலையத்திற்கு தர இறங்க வந்த விமானங்கள் தரவிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டிருந்தாக தகவல் வெளியானது.

துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் எர்லைன்ஸ் பயணிகள் விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மற்ற விமானங்களில் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மழை நின்றுதும் தரையிறங்க வந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விமான நிலையத்தில் தரையிறங்கின.

இந்த நிலையில், நேற்று இரவும் சென்னையில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக இரண்டாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன. இரண்டு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாவது நாளாக இரவில் சென்னையில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் இருந்து புறப்படும் 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flight service affected in Chennai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->