காவிரியில் வெள்ளம் : கொடுமுடியில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த நீரால் முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்.. !! - Seithipunal
Seithipunal



காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொடுமுடியில் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. எனவே அங்குள்ள மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

மேட்டூர் அணையில் இருந்து சுமார் 1 லட்சம் கன அடிக்கும் மேல் உபரி நீர் திறந்து விடப் பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவிரிக் கரையோரம் வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள 41 இடங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. 

மேலும் ஈரோடு மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் உள்ள 30 கிராமங்களில் 18 கிராமங்கள் காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 77 முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. 

இதனிடையே காவிரியில் உபரி நீர் திறப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பவானி புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

இதேபோல் கொடுமுடியிலும் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்குள்ள மக்களையும் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் காவிரியில் வெள்ளப் பெருக்கு காரணமாக ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் ஈரோடு நகரத்தில் குடிநீர் விநியோகமும் பாதிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக ஆடிப் பெருக்கு கொண்டாட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood in Kodumudi River due to Water Opening in Cauvery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->