தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்..தொடர்மழை எதிரொலி..! - Seithipunal
Seithipunal


இந்த கத்திரி வெயில் காலத்தில் அதிகப்படியான வெயிலின் தாக்கத்தால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கோடை மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக 'ரெமல்' புயல் உருவாகி,இன்று இரவு வங்கக் கடல் அருகே கரையை கடக்க உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பொழிந்து கொண்டுள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் பரக்காணி  -  வைக்கல்லூர் இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து வெள்ளநீர் வெளியே வந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் அதிக நீர்வரத்து மற்றும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கூறி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood in Thamirabarani River due to Heavy rain


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->