வரலட்சுமி நோன்பு எதிரொலி - அதிரடியாக உயர்ந்த பூக்கள் விலை.!
flower price increase in osoor flower market
வரலட்சுமி நோன்பு எதிரொலி - அதிரடியாக உயர்ந்த பூக்கள் விலை.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர் பகுதியில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசக்கூடிய மக்கள் அதிக அளவில் இருப்பதால் வரலட்சுமி நோன்பு பண்டிகை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி நோன்பு கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 25-ம் தேதி வரலட்சுமி நோன்பு கொண்டாடப்பட உள்ளது.
இதனால், ஓசூர் மலர் சந்தையில் இன்று முதல் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. பூக்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில், ஒரு கிலோ மல்லிகைப் பூ 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் பூ 1600 ரூபாய்க்கும், முல்லை 600 ரூபாய்க்கும், சாமந்திப்பூ 240 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வருடம் பூக்களின் விற்பனை எதிர்பார்த்த அளவை காட்டிலும் அதிகமாகவே உள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து பூக்களை வாங்கிச் செல்வதாக கூறுகின்றனர்.
English Summary
flower price increase in osoor flower market