மக்கள் தலையில் விழுந்த இடி! மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் உயர்வு! - Seithipunal
Seithipunal


மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் உயர்ந்துள்ளதாக செய்தி வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டுக்கு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், சிறு,குறு தொழில் நிறுவனங்கள், ஐடி தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் படி, அனைத்து வகையான மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் அதிகரித்து உள்ளது. மின்கட்டணம் உயர்வு ஜூலை ஒன்றாம் தேதி முதலில் அமுலுக்கு வந்தது.

தற்போது மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது வீடுகளுக்கு ஒருமுறை மின்சார இணைப்பு வழங்க ரூ. 1, 020 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது கட்டணம் ரூ. 1070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் மும்முனை மின்சார இணைப்பிற்காக கட்டணம் ரூ. 1535 இருந்து ரூ. 1,610 ஆக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் அனைத்து வகையான மின் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Following the electricity bill the electricity service fee will rise


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->