சவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு - பிரியாணி கடைக்கு சீல் வைப்பு.!!
food safety department officers seal to
சென்னையில் உள்ள அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி மற்றும் ஷவர்மா சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரியாணி கடையில் கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தி ஷவர்மா செய்யப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
food safety department officers seal to