பாம்புடன் போஸ் கொடுத்த விவகாரம் - டிடிஎப் வாசன் வீட்டில் வனத்துறையினர் சோதனை.!
forest department officer investigation ttf vasan house
கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை அடுத்த வெள்ளியங்காட்டை பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் டி.டி.எப்.வாசன். இவர் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுவது, காரை அஜாக்கிரதையாக இயக்குவது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்த நிலையில் டி.டி.எப்.வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்தபடி வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், தான் அந்த பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் டி.டி.எப்.வாசன் உரிமம் பெற்றிருந்தாலும் பாம்பை துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது குறித்து சென்னை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக டி.டி.எப்.வாசனின் வெள்ளியங்காடு இல்லத்துக்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வேறு ஏதாவது விலங்குகளை வளர்த்து வருகிறாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, சென்னையில் உள்ள வீட்டில் மட்டுமே பாம்பு உள்ளிட்டவற்றை வைத்து பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனை குறித்து காரமடை வனத்துறையினர் தெரிவித்ததாவது:-
"டி.டி.எப் வாசன் வீட்டில் சோதனை நடத்தினோம். ஆனால் இங்கு விலங்குகள் எதுவும் இல்லை. இது தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டோம் என்றுத் தெரிவித்தனர்.
English Summary
forest department officer investigation ttf vasan house