தருமபுரி "பூர்வ குடிகளை" வெளியேற்றியது ஏன்.? - வனத்துறை விளக்கம்
Forest dept explain evict the original inhabitants
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏமனூர், சிங்காபுரம், மணல் தீட்டு உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த பூர்வ குடி மக்களை வனத்துறை அதிகாரிகள் இரண்டு தினங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த சம்பவத்தில் பெண்கள் மீது வனத்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இது குறித்து வனத்துறை சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிமன்ற உத்தரவின் படி யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வெளியேறுமாறு கடந்த மூன்றாம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் மணல்மேடு பகுதியில் வசித்து வரும் 15 குடும்பத்தினர் வெளியேறாததால் வெளியேற்று நடவடிக்கையில் ஈடுபட்டதாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் அதனை ஏற்க மறுக்கும் பூர்வ குடிகள் 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
Forest dept explain evict the original inhabitants