கொலை மிரட்டல்!ரூ.100 கோடி நிலமோசடி! எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்! - Seithipunal
Seithipunal


ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி நிலம் மோசடி வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திருச்சியில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த நிலத்தின் உரிமையாளர் என கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகரன், பிரவின் உள்ளிட்டவர் மீது வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான நிலமோசடி வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆர் விஜயபாஸ்கர் நேற்று முன் தினம் போலீசார் கைது செய்த நிலையில், மத்திய சிறையில் இருந்து நேற்று போலீஸ் பாதுகாப்பு எம்.ஆர் விஜய பாஸ்கரை போலீசார் கரூர் நீதி மன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர், ரூ.100 கோடி மதிப்புள்ள நிலமோசடி வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற 31ஆம் தேதி வரை எம்.ஆர் விஜயபாஸ்கரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் பின்னர், நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former AIADMK minister MR Vijayabhaskar remanded till 31st in Rs 100 crore land grab case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->