பார்முலா-4 கார் பந்தயம் : சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாளை முதல் செபடம்பார் 1-ம் தேதி வரை பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளதையொட்டி, தீவுத்திடலை சுற்றி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, பெருநகர சென்னைப் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை தீவுத்திடலுக்கு தெற்கிலிருந்து வரும் வாகனங்கள்: காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட், ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.  

மேலும் மவுண்ட் ரோட்டில் இருந்து வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும் என்றும்,  சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதே போல் வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை. மேலும்  தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Formula 4 car race Traffic change in Chennai from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->