பெற்றோர்களே உஷார் : சாக்லேட் என நினைத்து ' கொக்கு மருந்து ' சாப்பிட்ட நான்கு சிறுவர்கள் மருத்துவனையில் அனுமதி!!
Four children admitted to hospital after consuming cockroach medicine
சாக்லேட் என நினைத்து குப்பையில் கிடந்த கொக்கு மருந்தை சாப்பிட்ட 4 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் கடற்கரை பகுதியில் 50க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் அங்கு குடிசைகட்டி வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் வசித்து வருபவர் சின்னப் பையன். அவரது மகள்கள் ஸ்ரீதர், அய்யனார் அதே பகுதியில் வசித்து வருபவர் விஜய் அவரது மகன் சாய்சரண் மகள் காவியா ஆகிய நான்கு சிறுவர்களும் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமி காவியா மற்றும் சிறுவர்கள் ஸ்ரீதர், சாய்சரண் அய்யனார் ஆகியோர் அங்குள்ள கடற்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்குள்ள குப்பையில் ஒரு பொட்டலம் இருப்பதை பார்த்த நான்கு சிறுவர்களும் அதை சாக்லேட் என நினைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
சாப்பிட்டு சிறிது நேரத்தில் 4 பெரும் வாந்தி எடுத்து மயங்கினர். இதனை அடுத்து அவர்கள் நான்கு பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரம் போலீசார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் இருளர் குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினர்.
English Summary
Four children admitted to hospital after consuming cockroach medicine