அமைச்சர் நேருவின் நிகழ்ச்சியை புறக்கணித்த  எம்எல்ஏக்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அமைச்சர் நேருவின் நிகழ்ச்சியை புறக்கணித்த  எம்எல்ஏக்கள் - நடந்தது என்ன?

திருச்சி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் எட்டு திமுக அமைச்சர்கள் உள்ளனர். அதாவது திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவும், திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ், ஸ்ரீரங்கம் தொகுதியில் பழனியாண்டி, துறையூர் தொகுதியில் ஸ்டாலின் குமார், லால்குடி தொகுதியில் சௌந்தரபாண்டியன், திருச்சி கிழக்கு தொகுதியில் இனிகோ இருதயராஜ், மணச்சநல்லூரில் கதிரவன், முசிறியில் தியாகராஜன் என்று எட்டு திமுக எம்எல்ஏக்கள் உள்ளனர்.  

இந்த எட்டு பேரில் அமைச்சர் நேரு மற்றும் அமைச்சர் மகேஷ் ஆதரவாளர்களாக ஆறு அமைச்சர்கள் உள்ளார்கள். அவர்களில் மூன்று பேர் தற்போது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக மாறி உள்ளனர். இந்தத் தகவல் அமைச்சர் நேருவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் அவர் விலகிச் சென்ற அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று ஆவேசமாக பேசியுள்ளார். இதைக்கேட்டு பதறிப்போன அமைச்சர்கள் அமைச்சரின் ஆதரவு மாவட்ட செயலாளரிடம் சென்று நம்ம அமைச்சர் இப்படி பேசலாமா? என்று கேட்டுள்ளார்கள்.

இதற்கிடையே, திருச்சியில் அரசு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் நேரு மற்றும் அன்பில் மகேஷ்  பார்வையிட்டு உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியை செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்த நான்கு அமைச்சர்களும் புறக்கணித்து உள்ளார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four ministers avoide minister nehru programme in trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->