திண்டுக்கல் : பிறந்த குழந்தையை 3 லட்சத்திற்கு விற்பனை செய்த தந்தை உள்பட 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் : பிறந்த குழந்தையை 3 லட்சத்திற்கு விற்பனை செய்த தந்தை உள்பட 4 பேர் கைது.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே தாத்தாகவுண்டனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கோபி, ருக்மணி தம்பதியினருக்கு  ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் ருக்மணிக்கு கடந்த மாதம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை வளர்ப்பது சிரமம் என்று கருதி, தம்பதியினர் அந்த குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

அதன் படி தம்பதியினர் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஒட்டன்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி, கரூர் பரமத்தி வேலூரை சேர்ந்த தமிழரசி உள்ளிட்டோரிடம் உதவி கேட்டுள்ளனர். அவர்கள் குழந்தையை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ரூபாய் 3 லட்சத்திற்கு குழந்தையை விற்றுள்ளனர். 

இதற்கிடையே கிராம செவிலியர் குழந்தை குறித்து பெற்றோரிடம் விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த செவிலியர், சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. பின்னர் போலீசார் குழந்தையை விற்பனை செய்தது தொடர்பாக குழந்தையின் தந்தை கோபி, குழந்தையை விற்க துணையாக இருந்த மணிகண்டன், தேன்மொழி, தமிழரசி உள்ளிட்டோரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி குழந்தை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அந்தக் குழந்தையை மீட்டனர். பிறந்த குழந்தையை விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for baby sale in dindukal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->