கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது.!

சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். பழக்கடை நடத்தி வரும் இவர், பள்ளிக்கரணை காமாட்சி நகரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை வெங்கடேசன் கேட்டபோது, அய்யனார் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஆட்டோவில் அய்யனாரின் பழக்கடைக்கு வந்துள்ளார். அங்கு அய்யனாரின் மனைவி அல்லி மட்டும் இருந்துள்ளார். இதனால், வெங்கடேசன் மற்றும் அவரின் நண்பர்கள் அலியிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். 

அப்போது அவர்கள் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அல்லியை வெட்ட முயன்றுள்ளனர். அத்துடன், அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துள்ளனர். மேலும், கடையில் இருந்த எடை போடும் எந்திரம் உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து விட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பித்துச் சென்றனர்.

இந்த நிலையில், அல்லி சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியாக இருந்த பெண்ணை கொலை செய்ய முயன்ற வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர். 

பின்னர் அவர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for kill try to woman in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->