சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த மடத்து ஊழியர்கள் - திருச்சியில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயுபுரம் அருகே திருப்பராய்த்துறையில் ராமகிருஷ்ண மடத்தின் அறக்கட்டளை மூலம் விடுதியுடன் கூடிய உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்பது பேர் கொண்ட அறங்காவலர் குழு நடத்தும் இந்தப் பள்ளியில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் ஏராளமான படிக்கின்றனர்.

இந்த ஒன்பது பேர் கொண்ட குழுவில் ராமமூர்த்தி என்பவர் பொருளாளராக உள்ளார். இவர் மடத்தில் தங்கி உள்ள சிறுவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் நான்கு பேருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலக அதிகாரிகளும், போலீஸாரும் கடந்த நான்காம் தேதி மடம், அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு அதே மடத்தில் பணியாற்றிய சமையலர் சிவகிரி, பிளம்பர் இயேசுராஜ், காப்பாளர் பார்த்திபன், காசாளர் தனசேகரன் அதே பள்ளியை படித்த மூன்று சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பிளம்பர் இயேசுராஜ் ஓராண்டிற்கும் முன்பும், தனசேகரன் இரண்டு மாதங்களுக்கு முன்பும் மடத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டனர்.

இந்த நிலையில் தற்போது சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதால் போலீசார் சிவகிரி ஏசுராஜ் பார்த்திபன் தனசேகரன் உள்ளிட்ட நான்கு பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested sexuall harassmanet to childrens in trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->