ரூ.66.87 லட்சம் மோசடி! கிரிப்டோ கரன்சியில் முதலீடு இரட்டிப்பு லாபம்! ஆசை காட்டி அல்வா குடுத்த மர்மக்கும்பல்! - Seithipunal
Seithipunal


கிரிப்டோ கரன்சியல் முதலீடு ஆசை காட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.66.87 லட்சம் மோசடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேர்ந்தவருக்கு வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அது ஒரு இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரிப்டோ கரன்சிகள் வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் இதன் மதிப்பு உயர்ந்து கொண்டு இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உங்களுக்கு பணம் தேவைப்படும்போது அதை விற்றால் லாபத்துடன் உங்கள் முதலீட்டுத் தொகையும் உங்களுக்கு கிடைக்கும் தெரிவித்துள்ளது.

இதனை நம்பி தன்னிடம் இருந்து 66 லட்சத்து 87 ஆயிரத்து 500 பணத்தை அந்த இணையதளத்தின் மூலம் அனுப்பி உள்ளார். இணையதள பக்கம் முடங்கியது இதனால் சந்தேகம் அடைந்தவர் தன்னை தொடர்பு கொண்ட வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை  உணர்ந்த வருடத்தின் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fraud of Rs 66 lakh from a private company employee pretending to invest cryptocurrency


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->