அரசு பள்ளிகளில் 3வது மொழியை பயிற்றுவிக்க சென்னை மாநகராட்சி முடிவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான சிறப்பு திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 14,650 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் மூன்றாவது மொழி பயிற்றுவிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சிட்டிஸ் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை பயிற்றுவிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக Educational Cooperation Attaché for French மற்றும் Alliance Française of Madras ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் சென்னை மாநகராட்சி நிர்வாகம் முதல் கட்ட ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த அமைப்புகள் மூலம் சென்னை மாநகராட்சியில் பிரெஞ்ச் மொழிகளை பயிற்றுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

French language training program in Chennai Corporation Schools


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->