விபத்தில் உயிரிழந்த நண்பன் - சக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அடுத்த அட்டுகொலை கிராமத்தை சேர்ந்தவர் ரித்திக். கேத்தியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த இவர் கடந்த டிசம்பர் மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

கால்பந்தாட்ட வீரரான இவரது மறைவு நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அவரது நினைவை போற்றும் விதமாக நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு நிகழ்விற்கு திட்டமிட்டனர். அதன்படி எல்லநள்ளி பகுதியில் உள்ள ஏடிகே கால்பந்தாட்ட குழுவின் சார்பாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. 

இந்த போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ரித்திக்கின் தாய் ரெஜினா மற்றும் சகோதரர் ஜான் உள்ளிட்டோரை, நண்பர்கள் அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு ஒரு அட்டை பெட்டியில் நினைவு பரிசை வழங்கினர். 

அதை திறந்து பார்த்ததில், ரித்திக்கின் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டிருப்பதை கண்டு பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்து, கண்ணீர்விட்டு அழுதுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

friends provide statue to co friend mother in nilgri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->