G20 நிதி கட்டமைப்பு மாநாடு: மாமல்லபுரத்தில் இன்று தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


கடந்த 1999-ஆம் ஆண்டு ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினர்களாக உள்ளன.

இதில் ஒவ்வொரு ஆண்டும் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு நாடு அமைப்பின் தலைமை பதவியை வகிக்கும். கடந்த ஓராண்டாக இந்தோனேசியா தலைமை வகித்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டின் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது.

இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் கல்வி, பெண்கள் வளர்ச்சி, நிதி, பொருளாதாரம், கலாசாரம், சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் திறன், எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு,பன்னாட்டு நல்லுறவு, எரிசக்தி பாதுகாப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆலோசனைகளும், விவாதங்களும் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நிதி கட்டமைப்பு தொடர்பான 3-வது மாநாடு மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து மாமல்லபுரத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்த உள்ளூர் உல்லாசப் பயணங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை நினைவுகூரும் வகையில் யோகா அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G20 summit Financial Framework Conference begins today in Mamallapuram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->