திருடர்களை கட்டிப்போட்டு உதைத்த ஊர் மக்கள்! வீடு புகுந்து திருட முயன்ற கும்பல் கைது! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வீடு புகுந்து திருட முயன்ற கும்பலை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுவாமிநாதன். மும்பையில் வேலை பார்த்து வரும் இவரது மகன் சத்யநாராயணன் தனது செல்போன் மூலம் நேற்று அதிகாலை தங்களது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை கண்காணித்தார்.

அப்போது, சுவாமிநாதன் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள படிக்கட்டு வழியாக மர்ம நபர்கள் 4 பேர் மாடிக்கு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சத்யநாராயணன் உடனே சுவாமிநாதனை செல்போன் மூலம் தொடர்புகொண்டு  தகவல் தெரிவித்தார்.

உடனே அவர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் 4 பேரும் எதிர் வீட்டை சேர்ந்த ரகு என்பவரும் வீட்டில் 3 பேரும் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்து அவர் திருடன் திருடன் என்னை கூச்சலிட்டு உள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கதினர் விரைந்து வருவதை கண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இருப்பினும் அவர்களின் 5 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி உள்ளனர். இதனைய்டுத்து பிடிபட்ட அவர்களிடம் பொதுமக்கள் விசாரித்த போது அவர்கள் கொள்ளையடிக்க வீட்டுக்குள் புகுந்தது தெரியவந்துள்ளது. ஊர்மக்கள் அவர்களுக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். அதன் பின்னர் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு வந்த புவனகிரி போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதில், அவர்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல்,அன்பழகன், காட்டுமன்னார்கோவில் சுரேஷ், திருச்சி சமயபுரத்தை சேர்ந்த மதியழகன், மும்முடிசோழகன் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து 5 பேரிடமும்  போலீசார் விசாரணை செய்து வருகினற்னர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை காவல்துறை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gang who tried to break into a house and steal it was arrested near Bhuvanagiri


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->