திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவரா நீங்கள்? இதை தெரிந்து கொள்ளுங்கள்.!
girivalam peoples no worship in lingam
உலக புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாளில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதன் படி கிரிவலம் செல்ல தொடங்குபவர்கள் ராஜ கோபுரம் எதிரில் நின்று, ராஜ கோபுரம் மற்றும் உள்கோபுரத்தை தரிசனம் செய்து தேரடி பாதையின் இடது புறம் உள்ள முனீஸ்வரரை வணங்கியதும் மலைவல பாதையில் நடக்க தொடங்க வேண்டும்.
கிரிவலப் பாதையில் 40-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. பல மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதிகளும் அமையப்பெற்றுள்ளன. இது ஒருபுறம் இருப்பினும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய அஷ்ட லிங்கங்களை மட்டும் தரிசனம் செய்தபடி கிரிவலம் வந்தால் முழு பலனும் கிடைக்கப்பெறும்.
கிரிவலப்பாதையில் உள்ள ஆதி அருணாச்சலேஸ்வரர் ஆலயம், இந்திரன் சாபவிமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன், அம்பாள் அபிதகுஜலாம்பாள் சமேதராக காட்சி தருகிறார். கிரிவலம் செல்வோரில் ஒரு பகுதியில் மலை வழியில் உள்ள கடைசி லிங்கமான ஈசான்ய லிங்கத்தை சிலர் தரிசிக்காமல், வேறு வழியில் சென்று விடுகின்றனர். இது தவறாகும். ஈசான்ய லிங்கத்தை தரிசனம் செய்வதே முழு பலனையும் தரும்.
English Summary
girivalam peoples no worship in lingam