உனக்கு 20, எனக்கு 18.! பெற்றோருக்கு கம்பி நீட்டிய மாணவி இன்ஸ்டா காதலனுடன் எஸ்கேப்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி ரிஷா கடந்த மூன்று ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் வினு என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று கல்லூரிக்குச் சென்ற ரிஷா வீடு திரும்பாததால் இது குறித்து அவருடைய தந்தை குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா காதலனுடன் கெத்தாக தானாக முன்வந்து குளச்சல் காவல் நிலையத்தில் ஆஜரானார் ரிஷா.

வினுடன் திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் சம்பாதிக்காததால் அவரை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவித்த அவர் பெற்றோர்கள் தங்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் மிரட்டுவதாகவும் பரபரப்பு புகாரை அளித்தார்.

இதனை அடுத்து மாணவியின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்த குளச்சல் காவல் நிறைய போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் ரிஷா மற்றும் வினுவின் ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழை போலீசார் சரி பார்த்ததில் இன்ஸ்டா காதலன் வினுவுக்கு 20 வயது மட்டுமே பூர்த்தியானது தெரியவந்துள்ளது.

சட்டப்படி வினு திருமண வயதை கடக்காததால் ரிஷாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வீட்டை விட்டு வெளியேறிய ரிஷாவுக்கும் இன்ஸ்டா காதலன் வினுவுக்கும் நன்றாக படிக்குமாறு அறிவுரை வழங்கிய போலீசார் பெற்றோருடன் செல்லுமாறும், திருமண வயதை கடந்த பிறகு இரு விட்டாரும் பேசி திருமணம் செய்து கொள்ளுமாறும் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த இன்ஸ்டா காதல் சிட்டுக்கள் காவல்துறையினர் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிவிட்டு காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த பிறகு பெற்றோர்களுக்கு கம்பி நீட்டிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர். இந்த சம்பவம் குளச்சல் பகுதியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girlfriend absconding with boyfriend who not marriageable age


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->