விவசாயிகள் நிலத்தை பறித்த வக்பு வாரியம்?! துணைபோகும் திமுக அரசு! போராட்டத்தை துவக்கும் பாஜக.!
GK Nagaraj Say About Aarkadu Farmers land issue
பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் விடுத்துள்ள அறிக்கையில், "இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த வேப்பூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு சொந்தமான 57.8 ஏக்கர் நிலத்தை வக்பு வாரியம் தனக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அதற்கு திமுக அரசின் மாவட்ட நிர்வாகம் துணை நின்று 6 ஏக்கர் நிலத்தை பட்டாபோட்டு முறைகேடு செய்திருக்கிறது. மதத்தினருக்கு வழங்கியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டபோது வக்பு வாரியத்தை அணுகி தீர்வுகாணுங்கள் என மாவட்ட ஆட்சியர் கூறுகிறார்.
கடந்த 50 ஆண்டுகளாக மேற்படி பூமியில் விவசாயம் செய்தும் தங்களது பெயரில் உரிய பட்டா இருந்தும், திமுக அரசின் உதவியோடு வக்பு வாரியம் விவசாய நிலத்தை அபகரிக்க நினைப்பது கண்டனத்துக்குரியது.
இதுதொடர்பாக இராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும், தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா அவர்களையும், என்னையும்(G.K.நாகராஜ்) சந்தித்து, தங்கள் நிலத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொண்டனர்.
இதுதொடர்பாக வரும் 24-ம் தேதி இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் H.ராஜா உடன் நானும் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளேன். அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தை மீட்டுத்தர பாஜக துணைநிற்குமென மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்தார்.
இதுபோன்று தமிழகத்தின் பல இடங்களில் வக்புவாரியம் விவசாய நிலங்களை அபகரிக்க திமுக அரசு துணைநிற்பது குறிப்பிடத்தக்கது."
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.
English Summary
GK Nagaraj Say About Aarkadu Farmers land issue