கன்னியாகுமரி மீனவர்கள் கைது! ஜி.கே.வாசன் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற பொழுது, இந்தோனேசிய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழக மீனவர்கள் இதுபோல தொடர்ந்து கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் சேதப்படுத்துவது வழக்கமாகி வருகிறது. இச்செயல் தமிழக மீனவர்களிடையே மிகுந்த அச்சத்தையும், கவலையையும் உண்டாக்கி உள்ளது. 

மத்திய வெளியுறவுத் துறை உடனடியாக இந்தோனேசிய அரசுடன் பேசி, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan Condemned Fishermen arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->