சொத்து வரி உயர்வை கண்டித்து ஜி.கே.வாசன் போராட்டம் அறிவிப்பு.!
GKVASAN protest announced for property tax hike
சொத்து வரி உயர்வை எதிர்த்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
தமிழக அரசு மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்துவதாக அறிவித்துள்ளது. தமிழக மக்கள் அனைவரும் இந்த வரி உயர்வால் பல்வேறு பிரிவினரும் மிகவும் பாதிக்கப்படுவார்கள் தமிழக அரசு இதனை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சொத்து வரி உயர்வு என்பது கடந்த காலங்களில் உயர்த்தப்படும் பொழுது ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டு குறைந்த அளவே உயர்த்தப் பட்டது என்றும் ஆனால் தற்போது அந்த பாதிப்பிலிருந்து பொருளாதார இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த சொத்து வரி உயர்வை என்பது நகர்ப்புற மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சொத்து வரி உயர்வு ஏழை எளிய மக்களை பல்வேறு நிலைகளில் பாதிக்கும் சுற்றி உள்ளவர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அதாவது கிராமங்களில் இருந்து வந்து பணியாற்றும் பெரும்பாலானோர் நகரத்தில் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர் அவர்களது வாடகை உயரவும் வணிக கட்டிடங்களின் வாடகை உயர்வால் பொருட்களின் விலைவாசி உயரும் வாய்ப்பு இருக்கிறது இதனால் பல தரப்பட்ட மக்களும் பாதிப்பு உள்ளவர்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறோம் என்று கூறிக்கொண்டு நாட்டு மக்களை அதிக வரி விதிப்பு என்ற ஆயுதத்தால் வதைப்பது எவ்விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசு, மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் இந்த சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற 11ம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தனது தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்க நண்பர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
GKVASAN protest announced for property tax hike