கன்னியாகுமரி கடலுக்கு நடுவே கண்ணாடி பாலம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கடலின் நடுவே திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் குறித்த கண்ணாடி நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், பிரமாண்டமாக 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

 இந்த சிலையை கடந்த 01-01-2000 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆகிறது.

இத்தனையோ, தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதற்காக குமரி மாவட்ட நிர்வாகம் கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்திலும், கடலின் நடுவே திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைப் பகுதியிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் இன்று கன்னியாகுமாரிக்கு சென்றிருந்தார்.

அதனை தொடர்ந்து மாலை 05 மணியளவில் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

அப்போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,  திருவள்ளுவர் சிலைக்கும், கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். முதலமைச்சரின்  வருகையையொட்டி, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Glass bridge in the middle of the Kanyakumari sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->