சவரனுக்கு ரூ.2200 குறைந்தது தங்கம் விலை! மத்திய பட்ஜெட் எதிரொலியால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி சுங்க வரி குறைவு எதிரொலியாக, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.6,550-க்கும், சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கும் விற்பனையாகிறது

இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. 

மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி ஆகிய பெருட்களின் சுங்கவரி வரி குறைப்பால் ஒரு கிராமுக்கு ரூ.100 முதல் ரூ.125, ஒரு சவரனுக்கு ரூ.800 முதல் ரூ.1000 குறைய வாய்ப்பு உள்ளதாக தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.6,550-க்கும் விற்பனையாகி வருகிறது.

மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3.50 குறைந்து, ஒரு கிராம் ரூ. 92.50-க்கு விற்பனையாகி வருகிறது. கிலோவுக்கு ரூ.3100 குறைந்து பார் வெள்ளி ரூ.92,500-க்கு விற்பனையாகி வருகிறது..

இன்று பட்ஜெட் தங்களுக்கு முன்பாகவே முன்னதாக தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையான நிலையில், மேலும் ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400-க்கு விற்பனையாகி  வருவதால் இல்ல தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும், தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold Price Union Budget 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->