கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்ய இனி கட்டணம்!
Google Pay new rule
கூகுள் பே, தனது பணப்பரிமாற்ற சேவையில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இனிமேல், யுபிஐ முறையில் பணம் பரிமாற்றம் செய்யும் போது கட்டணம் இல்லை என்றாலும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வழியாக கட்டணங்களை செலுத்தும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
தனிநபர்களுக்கிடையேயான நேரடி பணப்பரிமாற்றங்கள் முந்தையதைப் போல் இலவசமாகவே தொடரும்.
ஆனால், மின் கட்டணம், எரிவாயு சிலிண்டர் கட்டணம், போன் ரீசார்ஜ் போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், அந்த தொகையில் இருந்து கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கட்டணத் தொகையின் அடிப்படையில், பரிமாற்றத்திற்கான சேவைக் கட்டணம் 1 முதல் 5 சதவீதம் வரை இருக்கும்.
எடுத்துக்காட்டாக, ரூ.1000 அளவுக்கு டெபிட் கார்டு மூலம் செலுத்தினால், கூடுதலாக ரூ.10 சேவைக் கட்டணமாக பிடித்துக்கொள்ளப்படும்.
ஏற்கனவே, பே.டி.எம் உள்ளிட்ட சில பணப்பரிமாற்ற செயலிகள் இதுபோன்ற கட்டணங்களை வசூலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.