#ஈரோடு || திருமணம் ஆனதை மறைத்து திருமணம் செய்த பெண்ணை, பொது இடத்தில் வைத்து அடித்து உதைத்த இளைஞர்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம், கோபி பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று மாலை நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் ஒரு பெண்ணை தாக்கியுள்ளார். இதனை கண்ட பயணிகள் அந்த பெண்ணை மீட்டு அவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் இன்ஜினியர் என்பதும், அந்த பெண்ணுக்கும், அவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதும், சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் வீட்டிலிருந்து 1 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு நெல்லைக்கு வந்து விட்டதாகவும் தெரிய வந்தது.

மேலும், இது குறித்துஅந்த இளைஞர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவரின் அந்த புகாரில், நான் நெல்லை வந்து விசாரித்த போது, ஏற்கனவே அந்த பெண்ணுக்கு திருமணமாகி விவாகரத்து ஆனதும், அவருக்கு இரண்டு மகள்கள் இருப்பதும் தெரிய வந்ததாது.

இதனை மறைத்து அந்த பெண் என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார், மேலும் வீட்டிலிருந்து அவர் எடுத்து வந்த பணத்தை திருப்பி கேட்டபோது, நான் அந்த பெண் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து, அந்த பெண்ணிடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gopi fraud lady attacked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->