இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பதா? தமிழிசை காட்டமான பதிவு..! - Seithipunal
Seithipunal


இளையராஜாவிற்கு எதிரான விமர்சனங்கள் சரியா தெலுங்கனா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னருமான கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் திரையுலகின் மிகமுக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவர் சமீபத்தில் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, இணையதளத்தில் அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இளையாராஜாவிற்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் குறித்து தெலுங்கனா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டரில் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?

 

கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம்.

விழித்துக்கொள் தமிழகமே !!!!. இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governer Thamizhisai Tweet about Ilaiyaraja


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->